பக்கிங்காம் கால்வாய் ! ! !
கால்வாயின் வரைபடம்
சென்னையில் நிறையப் பேருக்கு இதைடைடல் பார்க்குக்கு எதிரே ஓடும்சாக்கடை என்ற அளவில் மட்டுமேதெரியும்.
பக்கிங்காம் கால்வாய் சோழமண்டலக்கடற்கரைக்கு இணையாக ஓடும்கால்வாய். இக்கால்வாய்ஆந்திரப்பிரதேசத்தின் விசயவாடாவில்இருந்து தமிழகத்தின் விழுப்புரம் வரைசெல்கிறது. உப்பு நீர் ஓடும்இக்கால்வாயின் நீளம் 420கிலோமீட்டர்கள். இக்கால்வாய் ஆங்கிலஆட்சியின் போது அமைக்கப்பட்டது. 19, 20 -ஆம் நூற்றாண்டுகளில் ஒருமுதன்மையான நீர்வழியாக இதுவிளங்கியது.
இக்கால்வாய் கடற்கரையில் இருந்துசென்னைக்கு பொருட்களைக் கொண்டுசெல்ல முதன்மையாகப்பயன்படுத்தப்பட்டது.
ஹிந்து முதலான நாளிதழ்களில்
கொஞ்சம் பேசப் பட்டிருந்தாலும் நான்சந்தித்த நிறைய பேருக்குத் தெரியாதவிஷயம் "பக்கிங்ஹாம் கால்வாய்"தென்னிந்தியாவின் மிக நீளமானநன்னீர் கால்வாய். இதைப் பற்றி நான்இங்கே பதியக் காரணம் இந்த விஷயம்மீடியாக்களால் பேசப் படவில்லைஎன்பதும், நமது பாடப் புத்தகங்களிலும்பெரிதாக எந்த விவரங்களும்தரப்படவில்லை என்ற ஆதங்கம் தான்.இதை அரசாஙகம் குப்பைகளாலும் இடிபொருட்களாலும் நிரப்பி மறைத்து விடமுயல்வது ஒரு தேச அவமானம். தொலைநோக்குப் பார்வை (அப்படின்னா)இல்லாத நமது தமிழக அரசாங்கங்கள்ஆங்கிலேயர் விட்டுப் போன ஒரேபுதையலையும் மண்ணாக்கி விட்டஅநியாயம் இது.
1806 ஆம் ஆண்டு வெட்டத் தொடங்கி பலகட்டங்களில் பல்வேறு ஏரிகளையும்ஆறுகளையும் இணைத்து 420 kmநீளத்தில் விஜயவாடாவையும் விழுப்புரம்மாவட்டத்தையும் இணைக்கும் இந்தஅதிசயம் உருவானது.தென்னிந்தியாவின் பல்வேறுபகுதிகளில் இருந்து சென்னைத்துறைமுகத்திற்கு சரக்குகள் கொண்டுசெல்ல இது பெரிதாக உபயோகப் பட்டுஇருக்கிறது. 19 மற்றும் 20 ஆம்நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர்களால்பெரிதும் உபயோகப்படுத்தப் பட்ட இந்தக்கால்வாய், சுதந்திரத்திற்குப் பிறகுகவனிப்பார் இல்லாமல் அழியத்தொடங்கியது. மற்ற பகுதிகளில்இன்னும் பெரிதும் பாதிக்கப் படாதஇந்தக் கால்வாய் 80 சதவீதம் இன்னும்உபயோக நிலையிலேயே உள்ளது.சென்னை நகரின் குறுக்கே ஓடும் 30 kmநீளமான பகுதி மட்டுமே கடும் நாற்றம்வீசும் சாக்கடையாக மாறிவிட்டிருக்கிறது.
MRTS என்ற பறக்கும் ரயில் திட்டம் இந்தக்கால்வாயை ஒட்டியே திட்டமிடப் பட்டது.இந்தக் கால்வாயே ஒரு MRTS என்பதுயாருக்குமே புரியவில்லை என்பதுபரிதாபம் தான். இந்த ரயில் பாதைகட்டுமானம் பெரும்பாலான இடங்களில்இந்தக் கால்வாயை சிதைத்துவிட்டிருக்கிறது. சில ரயில் நிலையங்கள்பக்கிங்ஹாம் கால்வாயை நிரப்பிக் கட்டப்பட்டிருப்பது போன்ற ஒரு முட்டாள்தனம்உலகத்தின் எந்த மூலையிலும் காணக்கிடைக்காத ஒன்று. 2004 ஏற்பட்டசுனாமியின் பொது பல லட்சம்உயிர்களை இது ஒரு வடிகாலாக இருந்துகாப்பாற்றியதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து தமிழக மற்றும் ஆந்திரஅரசுகளிடம் சொல்லி இருக்கிறார்கள்.ஆனாலும் பெரிதாக ஒரு முயற்சியும்எடுக்கப் பட்டதாகத் தெரியவில்லை.
பல கோடி செலவில் சாலைகள் அமைத்துநம்மிடம் சுங்கம் வசூலிக்கும் அரசு, இதுபோன்ற எளிய இயற்கையானபோக்குவரத்து வழிகளை ஏன் மறந்துவிட்டிருக்கிறது? இன்றைய தேதிக்கு இதுபோன்ற திட்டத்தை அமைக்க எத்தனைஆயிரம் கோடிகள் தேவைப்படும் என்றுயாராவது யோசித்தால் தேவலை (200%மந்திரி வரிகள் தனி).
ஒவ்வொரு முறை விமானத்தில் பறக்கும்போதும் பல இடங்களில் ஸ்கேல்வைத்துப் போட்டது போல நேராகத்தெரியும் இந்த பக்கிங்ஹாம் கால்வாய்நாம் எவ்வளவு அறிவில்லாமல்,பொறுப்பில்லாமல் வாழ்கிறோம்என்பதை ஒரு அளவுகோல் போலநினைவு படுத்திக் கொண்டேஇருக்கிறது.
இப்போதிய அவல நிலையில் பக்கிங்காம் கால்வாய் ? ? ?
மேலும் விவரங்களுக்கு:
http://en.wikipedia.org/wiki/Buckingham_Canal
http://www.thehindu.com/news/cities/chennai/lets-bike-and-boat-in-buckingham-canal/article3462672.ece
http://www.marinebuzz.com/2011/04/23/nmf-marg-group-explores-potential-of-buckingham-canal-to-boost-tamil-nadu-economy/
http://en.wikipedia.org/wiki/Buckingham_Canal
http://www.thehindu.com/news/cities/chennai/lets-bike-and-boat-in-buckingham-canal/article3462672.ece
http://www.marinebuzz.com/2011/04/23/nmf-marg-group-explores-potential-of-buckingham-canal-to-boost-tamil-nadu-economy/
அன்புடன் உங்கள் நண்பன் வினோத் கண்ணா . . .


No comments:
Post a Comment